இந்தியா

கொலையில் முடிந்த சண்டை.. சடலத்தை அப்புறப்படுத்த கால் டாக்சி புக் செய்த நபர்.. பிறகு நடந்தது என்ன ?

சொத்து தகராறில் கொலை செய்து விட்டு சடலத்தை அப்புறப்படுத்த கால் டாக்சி புக் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலையில் முடிந்த சண்டை.. சடலத்தை அப்புறப்படுத்த கால் டாக்சி புக் செய்த நபர்.. பிறகு நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சவுரப். இவர் கடந்த வாரம் தனது அண்ணி குசும் குமாரி என்பவருடன் மகாராஜபூர் என்ற இடத்திற்கு வந்துள்ளார். அங்கே குசும் குமாரிக்கு அவரது சொத்துக்களில் இருந்து சுமார் ரூ. 40 கோடி வரவிருந்தது. இதனால் சவுரப்புக்கும், குசும் குமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் தகராறு இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குசும் குமாரியை கொலை செய்ய எண்ணியுள்ளார் சவுரப். அதன்படி அவரது கூட்டாளிகளை வரவழைத்த சவுரப், அவர்கள் உதவியோடு குசும் குமாரியை கழுத்தை நெரித்தும், அடித்தும் கொலை செய்துள்ளனர். இதையடுத்து சடலத்தை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று யோசித்த அவர்கள் தூரமாக உள்ள இடத்தில் போட நினைத்து அந்த சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர்.

கொலையில் முடிந்த சண்டை.. சடலத்தை அப்புறப்படுத்த கால் டாக்சி புக் செய்த நபர்.. பிறகு நடந்தது என்ன ?

பின்னர் அவர்கள் கால் டாக்சி ஒன்றை புக் செய்துள்ளனர். அதன்படி கான்பூரை சேர்ந்த மனோஜ் என்ற கார் டிரைவர் வந்துள்ளார். அப்போது அவர் கார் டிக்கியை திறக்க சொல்லி அதில் அந்த மூட்டையை வைக்க முயன்றனர். அப்போது அந்த மூட்டையில் இரத்த கரை இருந்துள்ளது. இதனை கண்ட ஓட்டுநர், அவர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

கொலையில் முடிந்த சண்டை.. சடலத்தை அப்புறப்படுத்த கால் டாக்சி புக் செய்த நபர்.. பிறகு நடந்தது என்ன ?

இதனால் சவுரப் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஓட்டுநர் மனோஜை தாக்கியுள்ளனர். இதையடுத்து மனோஜ் அருகில் இருந்த போலீசுக்கு இதுகுறித்து புகார் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் சவுரப் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது நடந்தது தெரியவந்தது. இதையடுத்துங் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் கொலை செய்து விட்டு சடலத்தை அப்புறப்படுத்த கால் டாக்சி புக் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories