பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதி (நாளை) கேரள மாநிலம் கொச்சிக்கு செல்லவுள்ளார். அங்கே பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பயணம் மேற்கொள்கிறார். எனவே அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் நேற்று கேரளாவிலுள்ள பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடியின் கேரள பயணத்தின் போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படுமென கொச்சியைச் சேர்ந்த என்.ஜெ.ஜானி என்ற பெயர் குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இதுகுறித்து சுரேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விரைந்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் பாதுகாப்பை பல படுத்தி வருகின்றனர். இந்த கொலை மிரட்டல் கேரளாவில் பெரும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அதோடு இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அது யார் அனுப்பினார் ? எங்கு இருந்து வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கொச்சியைச் சேர்ந்த என்.ஜெ.ஜானி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கையெழுத்து உள்ளிட்டவற்றை வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் அந்த கடிதத்துடன் ஒத்து போகவில்லை. எனவே இவரது பெயரை தவறாக யாரோ பயன்படுத்துவதாக எண்ணிய அதிகாரிகள் அந்த கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த நபரின் பெயர் சேவியர் என்றும், தனது பக்கத்து வீட்டுக்காரரான ஜானியுடன் பகை உள்ளதும், எனவே அவரை பழிவாங்க இப்படி செய்ததும் சேவியர் தெரியவந்தது. செவியரை தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மோடியின் வருகைக்காக கேரளாவில் பலத்த பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பகை காரணமாக பக்கத்துக்கு வீட்டுக்காரரை பழிவாங்க எண்ணிய நபர் மீது தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்த்தால் கேரளாவில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.