இந்தியா

"இலவச திட்டங்களால் நாட்டின் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளது தமிழ்நாடு" -வடநாட்டில் வைரலாகும் Insta வீடியோ !

காவ்யா கர்நாடக் என்ற பெண் தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்தை இரண்டாவது பணக்கார மாநிலமாக்கியுள்ளது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இலவச திட்டங்களால் நாட்டின் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளது தமிழ்நாடு" -வடநாட்டில் வைரலாகும் Insta வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

"இலவச திட்டங்களால் நாட்டின் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளது தமிழ்நாடு" -வடநாட்டில் வைரலாகும் Insta வீடியோ !

அதன்பின்னர் இலவசம் குறித்து ஆங்கில ஊடகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் மோடியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வரும் காவ்யா கர்நாடக் என்ற பெண் தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இது போன்ற திட்டங்கள்தான் தமிழ்நாட்டை நாட்டிலேயே இரண்டாவது பணக்கார மாநிலமாக்கியுள்ளது என்றும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், "இந்தியாவின் மிகச்சிறந்த வளர்ச்சித் திட்டங்கள் தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த திட்டங்கள்.

இலவச வண்ணதொலைக்காட்சி,இலவச சைக்கிள், லேப்டாப், பாடபுத்தகம், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் , 10 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு 7500 ரூபாய் ஊக்கத்தொகை. 5 ரூபாய்க்கு அரசு உணவகம் போன்ற திட்டங்கள்தான் தமிழ்நாட்டை நாட்டிலேயே இரண்டாவது பணக்கார மாநிலமாக்கியுள்ளது" என்று கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறார்.

banner

Related Stories

Related Stories