பெங்களூரு நகரத்தில் அரசு சார்பில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகர பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தவர் முத்தையா சுவாமி. இவர் கண்டக்டராக பணியாற்றி இருந்த பேருந்து நேற்று இரவு கடைசி டிரிப் முடித்து விட்டு லிங்கதிரனஹள்ளியில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பேருந்தின் ஓட்டுநரை பிரகாஷ் பேருந்தை நிறுத்திவிட்டு ஓய்வறையில் சென்று தூங்கியுள்ளார். கண்டக்டர் முத்தையா சுவாமி மட்டும் பேருந்தில் தூங்கியுள்ளார். பின்னர் நள்ளிரவில் ஓட்டுநர் பிகராஷ் வெளியே வந்து பார்த்தபோது பேருந்து எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று புரியாமல் அருகிலிருந்த ஊழியர்களை எழுப்பினார். ஆனால் இவர்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்துள்ளது.
உடனே தீயணைப்பு நிலையம் மற்றும் போலிஸாருக்கு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பின்னர் பேருந்து உள்ளே சென்று பார்த்தபோது கண்டக்டர் முத்தையா சாமி உடல் கருகி உயிரிழந்த கிடந்ததைப் பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேடரஹள்ளி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து எப்படி எரிந்தது? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.