இந்தியா

'என்ன Old Political-லா' : உளறிய அமைச்சர்: பட்ஜெட் உரையின் போது Sorry கேட்ட நிர்மலா சீதாராமன்!

2023-2024ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

'என்ன Old Political-லா' : உளறிய அமைச்சர்: பட்ஜெட் உரையின் போது Sorry கேட்ட நிர்மலா சீதாராமன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் தொடங்கி வைத்தார். இதையடுத்து 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜ.க அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். மேலும் ஐந்தாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்

'என்ன Old Political-லா' : உளறிய அமைச்சர்: பட்ஜெட் உரையின் போது Sorry கேட்ட நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தியப் பொருளாதாரம் சரியான திசையில், வளமான எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும்" கூறினார்.

மேலும், சுதந்திரம் பெற்ற 75-ம் ஆண்டில், ஒளிரும் நட்சத்திரமாக இந்தியாவை உலகம் அங்கீகரித்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக கணிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் இது உயர்ந்த அளவாகும்.

'என்ன Old Political-லா' : உளறிய அமைச்சர்: பட்ஜெட் உரையின் போது Sorry கேட்ட நிர்மலா சீதாராமன்!

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை மற்றும் போர் போன்ற தடைகளுக்கு மத்தியில் இதனைச் சாதித்துள்ளோம். கடந்த 9 ஆண்டுகளில் உலகின் 10-வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்து வரும் போது புதிய மின்சார வாகனம் குறித்து அறிவிப்பை வாசிக்கும்போது, Replacing old polluted vehicle மாற்றப்படும் என படிப்பதற்குப் பதிலாகத் தவறுதலாக Replacing old political vehicle என்று மாற்றிவாசித்தார்.

'என்ன Old Political-லா' : உளறிய அமைச்சர்: பட்ஜெட் உரையின் போது Sorry கேட்ட நிர்மலா சீதாராமன்!

இதனால் அவையில் இருந்த பா.ஜ.க உறுப்பினர்கள் உட்பட அனைவரும் சிரித்து, அது political vehicle அல்ல polluted vehicle என கூறினர். தன் தவறை உணர்ந்த உடன் 'ஓ.. மன்னிக்கவும்' என கூறி மீண்டும் சரியாக அழுத்தி polluted vehicle என, பழைய மாசுபடுத்தும் வாகனங்களை மாற்றுவது நமது பொருளாதாரத்தைப் பசுமையாக்குவதில் ஒரு முக்கிய பகுதியாகும் என படித்து தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்தார். கிட்டத்தட்ட 1.26 மணி நேரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார்.

banner

Related Stories

Related Stories