இந்தியா

ஒன்றிய பட்ஜெட் 2023 -2024 .. எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் விலை உயர்வு? விலை குறைப்பு?.. முழு விவரம்!

ஒன்றிய அரசின் 2023 -24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

ஒன்றிய பட்ஜெட் 2023 -2024 .. எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் விலை உயர்வு? விலை குறைப்பு?.. முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் தொடங்கி வைத்தார். இதையடுத்து 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜ.க அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். மேலும் ஐந்தாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட்டில் எதற்கு எல்லாம் விலை உயர்வு? விலை குறைப்பு? என்பது பற்றி இங்குப் பார்ப்போம்:-

ஒன்றிய பட்ஜெட் 2023 -2024 .. எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் விலை உயர்வு? விலை குறைப்பு?.. முழு விவரம்!

சிகரெட் மீதான வரி 16% உயர்த்தப்பட்டுள்ளது. கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10% இருந்து 25% ஆக அதிகரிப்பு. சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5 % இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.மேலும், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கவசங்கள், பிளாட்டினம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.

காப்பர் ஸ்கிராப்புக்கு 2.5 % சலுகை அடிப்படை சுங்க வரி தொடரும் என அறிவிப்பு. டிவி பேனல்களின் திறந்த செல்களின் பகுதிகளுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 % குறைக்கப்பட்டது.ஏற்றுமதியை ஊக்குவிக்க இறால் தீவனத்தின் மீதான சுங்க வரி குறைப்பு. மொபைல் போன் உற்பத்திக்கான சில உள்ளீடுகளின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரம் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் விதைகள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பட்ஜெட் 2023 -2024 .. எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் விலை உயர்வு? விலை குறைப்பு?.. முழு விவரம்!

மேலும் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் உள்ளவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்றும் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்டு வருமானம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய வரி விகிதங்களையும் அவர் அறிவித்தார். இதன்படி, 7 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்கள் 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை 5 சதவீதமும், 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் வரை 10 சதவீதமும், 9 முதல் 12 லட்சம் வரை 15 சதவீதமும், 12 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதமும், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதமும் வருமான வரியாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories