இந்தியா

"ஆணுக்கும் மகப்பேறு விடுப்பு கொடுக்கவேண்டும்" -முன்னணி நிறுவனத்தின் துணைத் தலைவர் வேலையே உதறிய தந்தை !

தந்தை ஒருவர் மனைவியோடு இருந்து தனது குழந்தையை பார்த்துக்கொள்ள முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத் தலைவர் வேலையே உதறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஆணுக்கும்  மகப்பேறு விடுப்பு கொடுக்கவேண்டும்" -முன்னணி நிறுவனத்தின் துணைத் தலைவர் வேலையே உதறிய தந்தை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குழந்தைப்பேறு என்பது ஒவ்வொரு தம்பதிக்கும் விலைமதிப்பற்ற நிகழ்வாக இருக்கிறது. தற்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. இதனால் குழந்தை பிறக்கும்போதும், பிறந்த பின்னரும் குழந்தையோடு இருந்து அதை நன்றாக பார்த்துக்கொள்ளமுடிகிறது.

இந்த நிலையில், தந்தை ஒருவர் மனைவியோடு இருந்து தனது குழந்தையை பார்த்துக்கொள்ள முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத் தலைவர் வேலையே உதறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

"ஆணுக்கும்  மகப்பேறு விடுப்பு கொடுக்கவேண்டும்" -முன்னணி நிறுவனத்தின் துணைத் தலைவர் வேலையே உதறிய தந்தை !

கோரக்பூர் ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்று முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத் தலைவராக இருப்பவர் அன்கிட் ஜோஷி. இவரது மனைவி ஆகான்ஷா. இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஸ்பிதி என பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்த்துக்கொள்ள ஆகான்ஷா வீட்டில் இருந்தாலும் தானும் அவர்களோடு இருக்கவேண்டும் என அன்கிட் ஜோஷி முடிவு செய்துள்ளார்.

இதற்காக லட்சங்களில் சம்பவம் வாங்கிவந்த சீனியர் துணைத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக செய்தி இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிய வந்துள்ள நிலையில், அவர் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.

"ஆணுக்கும்  மகப்பேறு விடுப்பு கொடுக்கவேண்டும்" -முன்னணி நிறுவனத்தின் துணைத் தலைவர் வேலையே உதறிய தந்தை !

இது தொடர்பாக பேசிய அவர், "என் மகள் பிறந்த பிறகு அவளுடன் நேரம் செலவிட நீண்டநாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நான் வேலை பார்க்கும் நிறுவனம் அதற்கு அனுமதிக்காது என தெரியும். அதனால்தான் எனது வேலையே ராஜினாமா செய்தேன். குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாக தந்தைகளுக்கு உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories