இந்தியா

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி.. கால்நடை மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

மத்திய பிரதேசத்தில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி.. கால்நடை மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் மனித தோற்றத்துடன் விலங்குகள் பிறக்கும் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அறிவியல் பூர்வமாக மட்டுமே நாம் இவற்றைப் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மனித முகத்தோற்றத்துடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சிரோஞ்ச் தாலுகாவிற்குட்பட்ட செமால் கெடி கிராமத்தைச் சேர்ந்தவர் நவாப் கான்.

இவர் ஒரு எருமை மாடு மற்றும் ஏழு ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்தவகையில் இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று குட்டி ஈன்றுள்ளது. இந்த ஆட்டுக் குட்டிதான் மனித முகத்துடன் பிறந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்த அந்த ஆட்டுக்குட்டி மனிதனைப் போன்று கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கண்களைச் சுற்றி மனிதர்கள் கண்ணாடி அணிவதுபோன்று பெரிய கருவளையம் உள்ளது. கண்களுக்கு அருகே அடர்த்தியாக இருக்கும் ரோமங்கள் மனிதர்களுக்கு இருக்கும் தாடியைப் போன்று தோற்றமளிக்கிறது.

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி.. கால்நடை மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

இந்த ஆட்டுக்குட்டி பிறந்த காரணமாகக் கால்நடை மருத்துவர்கள் கூறுவது, "இப்படிப் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளுக்குத் தலை டிஸ்ஸ்பெசியா என்று அழைக்கப்படுகிறது. 50 ஆயிரம் விலங்கில் ஒன்றுதான் இப்படி பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அது ஆடுகளை விட கால்நடைகளில் பொதுவான ஒரு நிகழ்வாக உள்ளது.

மேலும் ஆடு கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும். அப்போது அதற்குத் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் ஆட்டுக்குட்டி மனித தோற்றத்துடன் பிறக்க வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories