கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கனாயக்கன ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அங்கன்வாடியில் 20க்கும் அதிகமான சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடியில் அந்த மையத்துக்கு, தாயை இழந்து, தந்தை, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்துவரும் 3 வயது குழந்தை சித்தார்த் என்பவரும் பயின்று வருகிறார்.
அந்த அங்கன்வாடியில் சிறுவன் சித்தார்த் அடிக்கடி தனது உடையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஒருவர் விளையாட்டாக மிரட்டுவதாக கூறி சிறுவனின் கால்சட்டை அருகே நெருப்பை பற்றவைத்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் கால் சட்டையில் நெருப்பு பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் அதற்குள் சிறுவனின் ஆண் உறுப்பில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த சிறுவனின் உறவினர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் விசாரணையில் அங்கன்வாடி ஆசிரியர் ரஷ்மி இந்த செயலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.