இந்தியா

SCREEN READER உதவியுடன் பட்டப்படிப்பு.. 47 லட்சம் ஊதியம்.. மாற்றுத்திறனாளிக்கு வேலை வழங்கிய MICROSOFT !

பார்வையற்ற பொறியியல் பட்டதாரி ஒருவருக்கு 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் MICROSOFT நிறுவனம் வேலை வழங்கியுள்ளது.

SCREEN READER உதவியுடன் பட்டப்படிப்பு.. 47 லட்சம் ஊதியம்.. மாற்றுத்திறனாளிக்கு வேலை வழங்கிய MICROSOFT !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த யாஷ் சோனகியா என்பவர் தனது 8 வயதில் பார்வையை இழந்துள்ளார். எனினும் இது குறித்து மனம் தளரான அவர், பள்ளிப்படிப்பை முடித்து இந்தூரில் உள்ள ஸ்ரீ கோவிந்த்ராம் சேக்சாரியா கல்லூரியில் B.Tech படிப்பில் சேர்ந்துள்ளார்.

அங்கு SCREEN READER உதவியுடன் பட்டப்படிப்பை முடித்த அவர், கோடிங் கற்றுக்கொண்டுள்ளார். இதன் பின்னர் சிலரின் வழிகாட்டுதலோடு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

SCREEN READER உதவியுடன் பட்டப்படிப்பு.. 47 லட்சம் ஊதியம்.. மாற்றுத்திறனாளிக்கு வேலை வழங்கிய MICROSOFT !

ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு வேலை வழங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி அவருக்கு ஆண்டு ஊதியமாக இந்திய மதிப்பில், 47 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

பெங்களூருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில் யாஷ் சோனகியா விரைவில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் சில ஆண்டுகள் அவர் வீட்டில் இருந்தே வேலை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அனுமதித்துள்ளது.

banner

Related Stories

Related Stories