இந்தியா

"மண்டையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள் மோடி.." -பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா ?

பா.ஜ.க.வில் இருக்கும் வாரிசுகள் குறித்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"மண்டையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள் மோடி.." -பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பா.ஜ.க நிறுவியதன் 42ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது அதில் பேசிய பிரதமர் மோடி, ‘வாரிசு அரசியலை பா.ஜ.க. மட்டுமே எதிர்க்கிறது' எனப் பேசினார். அதன் பின்னர் பல முறை வாரிசு அரசியலால் நாடு சீரழிகிறது என்றும், அதை நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் பேசினார்.

அவரின் கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஜனநாயகத்தின் மூலம் நடைபெறும் தேர்தலில் மக்களே அவர்களை தேர்ந்தெடுகிறார்கள் என்றும் இதில் குறை சொல்ல ஏதும் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

"மண்டையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள் மோடி.." -பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா ?

அதோடு பா.ஜ.க.வில் பதவியில் இருக்கும் பலர் வாரிசு மூலம் வந்தவர்கள்தான் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது பிரதமர் மோடி மீண்டும் வாரிசு அரசியல் குறித்து பேசியுள்ளதால் பா.ஜ.க.வில் இருக்கும் வாரிசு குறித்த பதிவுகள் மீண்டும் வைரலாகியுள்ளது.

பா.ஜ.க.வின் சில முக்கியமான வாரிசு அரசியல்வாதிகள் :

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை முன்னாள் முதல்வராக இருந்தவர்,

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரின் தந்தை பிரேம் குமார் துமால் ஹிமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர்,

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை தேபேந்திர பிரதான் முன்னாள் ஒன்றிய அமைச்சர்,

ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியா முன்னாள் ஒன்றிய அமைச்சர்,

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ,

"மண்டையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள் மோடி.." -பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா ?

மக்களவை எம்.பி துஷ்யந்த் சிங்கின் தாய்: வசுந்தரா ராஜே முன்னாள் முதல்வர் ராஜஸ்தான்,

மக்களவை எம்.பி வருண்காந்தியின் தாய் மேனகா காந்தி மக்களவை எம்.பி,

மாநிலங்களவை எம்.பி நீரஜ் சேகரின் தந்தை சந்திரசேகர் முன்னாள் பிரதமர்,

மக்களவை எம்.பி ராஜ்வீர் சிங் கின் தந்தை கல்யாண் சிங் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்.

இது தவிர கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 21 % வாரிசுகளுக்கு இடம் கொடுத்ததாக புள்ளிவிவரம் ஒன்றும் வெளியானது. பா.ஜ.க நிலைமை இப்படி இருக்க அந்த கட்சி பிறரை வாரிசு அரசியல் செய்கிறது என விமர்சித்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories