அரசியல்

எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!

அண்ணாமலையை ஒரு அரைக்கால் வேக்காடு என்று கருதியிருந்தோம். அதற்குக்கூட தனக்குத் தகுதி இல்லை என்று அடிக்கடி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என் சிலந்தி கட்டுரை விமர்சித்துள்ளது.

எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழக அரசியலைப் பற்றி அதன் தலையும் வாலும் தெரியாத கத்துக்குட்டியை பா.ஜ.க., அந்தக் கட்சியின் தலைவராக்கியுள்ளது. ஐ.பி.எஸ். ஆக உள்ள அந்த நபருக்கு இதெல்லாம் தெரியாது இருக்குமா? எனப் பலர் ஆச்சரியப்பட லாம்! இந்தக் கத்துக்குட்டி அரசியல்வாதி குறித்து, "உளறிக்கொட்டும் ஆட்டுக்குட்டி' - என்ற தலைப்போடு, 'சங்கி செய்திகள்' எனும் பேரில் ஒரு வீடியோ பதிவு, சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெகு வாகப் பரவியது! அதனைப் பார்த்து பலரும், இந்த நபரின் அரசியல் அறிவு கண்டு, உடலில் உள்ள பொறிகள் அனைத்தாலும் சிரித்தார்கள். அப்படிச் சிரிக்குமளவு இந்த அரசியல் அரைக்கால் வேக்காட்டுப் பேர்வழியை அக்குவேறு ஆணி வேறாகப் பிய்த்து உதறி எறிந்திருந்தது அந்த வீடியோ பதிவு!

அப்படி என்ன அந்த வீடியோ பதிவில் இருந்தது என்று அதனைப் பார்க்காதவர்கள் தெரிந்து கொள்ளத் துடிப்பது புரிகிறது; காக்கி உடை அணிந்து உயர் போலீஸ் அதிகாரியாக கருநாடக மாநிலத்தில் பணிபுரிந்தபோது; ஒரு விழாவில் பேசுகிறார். அவர் பேசிய அந்தப் பேச்சைக் கேளுங்கள். “வரலாற்று விஷயங்களை தப்புத் தப்பா கக் கூறிடும் இவரெல்லாம் எப்படி ஐ.பி.எஸ். ஆனார்?"

எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!

அந்த நிகழ்ச்சியில் இன்றைய தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் கன்னடத்தில், தமிழக மதிய உணவுத் திட்டத்தைப் பற்றி. தனது வாய்க்கு வந்தவாறு அளந்து விடுகிறார். "தமிழ்நாடு நல்லி, இந்த மிட்டே மீல், பர்ஸ்ட் இன் தி வேர்ல்ட், 1969 நல்லி” என - கன்னடமும், ஆங்கிலமும் கலந்து அந்த விழாவில் கதை அளந்து விடுகிறார். அதாவது, "1969-ல் தமிழக முதலமைச்சராக இருந்த காமராசர்தான். மதிய உணவுத் திட்டத்தை உலகத்திலேயே முதன்முதலாகக் கொண்டு வந்தார்" என்று பேசுகிறார். அது மட்டுமல்ல; அந்தக் காலகட்டத்தில் கல்வி அமைச்சராக கக்கன் இருந்தார் என்றும். அந்தப் பேச்சிலே குறிப்பிடுகிறார்!

1963 லிருந்து 1975 வரை காமராசர் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்ததாக நாம் படித்த வரலாற்றில் இல்லை. பெருந்தலைவர் காமராசர் முதலில் 1957 முதல் 1962 வரையும், பின்னர் 1962 முதல் 1963 வரை தான் முதலமைச்சராகப் பதவியில் இருந்துள்ளார். அதுமட்டுமல்ல, கக்கன் அவர்கள் உள்துறை,வேளாண்மைத் துறை, பொதுத் துறை அமைச்சராக இருந்துள்ளாரே தவிர ஒரு முறைகூட கல்வித்துறை அமைச்சராக இருந்ததில்லை! இப்படி எல்லாம் தமிழக வரலாறு குறித்து அரைகுறை அறிவுகூட இல்லாது பேசிடும் பேர்வழியை. தமிழகத் தலைவராக பி.ஜே.பி. நியமித்தது!

எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!

இவர், எல்லாம் தெரிந்த மேதை போல. கருநாடக மக்களிடம் அளந்து விட்டார்! அந்தப் பருப்பு தமிழ்நாட் டில் வேகாது என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். பல ஆண்டுகள் கர்நாடகத்தில் குப்பை கொட்டி விட்டுத் திரும்பிய நிலையில், தம்பி ஊருக்குப் புதுசு' - என்பதால் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் தெளிவை அவர் அறிந்திருக்க நியாயமில்லை ; இங்கே தள்ளுவண்டிவைத்து வியாபாரம் செய்பவர்கள் கூட, அரசியலை அக்கு வேறு ஆணிவேறாக அலசிடும் ஆற்றல் மிக்கவர்கள்! அதனால்தான் பாரதிய ஜனதா, ஜனசங்கமாக இருந்த காலந்தொட்டு எத்தனையோ பகீரதப் பிரயத்தனங்கள் செய்து பார்த்தும், தமிழகத்தில் தலை எடுக்க முடியவில்லை . தனது இருப்பைக் காட்டிக்கொள்ள அறிக்கைகள் விடுவது, செய்தியாளர்களைச் சந்திப்பது என்று, 'மூன்றாம் பிறை' திரைப்படத்தில் சுய நினைவு இழந்து, பின்னர் நினைவு திரும்பிய நிலையில் ஸ்ரீதேவி, தான் சுயநினைவு இழந்த காலகட்டத்தில் அவரது வாழ்வில் நடந்ததை மறந்து செல்லும்போது, தான் யார் என்பதை நினைவூட்ட பல ஷேஷ்டைகளைச் செய்து கமலஹாசன் காண்பிப்பாரே. அதைப்போல தனது இருப்பைக் காட்டிட, பல கோணங்கித் தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு பி.ஜே.பி. தலைவர்! |

மிகவும் முற்போக்குச் சிந்தனை கொண்டதாகவும், சமூக நீதி மண் என்றும் கூறிக்கொள்ளும் தமிழ்நாட்டில், ஒரு சில ஊராட்சித் தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஒரு செய்தி ஏடுகளில் வெளி வருகிறது! அந்தச் செய்தி வந்தவுடனேயே, அப்படி இருப்பின் அந்த நிலை உடனடியாகக்களையப்பட வேண்டும் என்று, ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதற்குத் தடையிருப்பின், அதனைத் தகர்த்தெறிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆட்சியாளர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்திய அறிக்கை, மறுநாள் செய்தித்தாள்களில் வெளி வருகிறது.

எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!

இதையெல்லாம் படிக்காது, தி.மு.க. ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில்தான் உள்ளது என்று, அறிக்கைவிட்டு, 'மூன்றாம் பிறை' கமலஹாசன் போல தனது இருப்பைக் காட்டிக்கொள்ள குரங்காட்டம் ஆடியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர்!

ஆண்டாண்டு காலமாக சனாதன தர்மம் என்ற பேரில் சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்து, ஆடுகளை மோத விட்டு இரத்தம் குடித்த நரி போல கொழித்து வந்த கூட்டத்திலிருந்து அதனை மீட்டெடுக்க, சுய மரியாதை உணர்வோடு திராவிட இயக்கம் எடுத்தமுயற்சிகளையும், அதில் வெற்றி கண்ட நிகழ்வுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது! மதுரை மாவட்டம் பாப்பாபட்டி,கீரிப்பட்டி,நாட்டார்மங்கலம் கிராமங்களின் ஊராட்சிகளில் பல ஆண்டு காலமாக தேர்தல் நடத்த முடியாத நிலை! சமூக நீதிக்கு எதிராக நடைபெற்ற அந்தத் தாக்குதலை முறியடித்தது தி.மு.க. ஆட்சி!

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக கலைஞர் இருந்த கால கட்டம்! பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களில் எப்படியாவது தேர்தல் நடந்தே தீர வேண்டும் என முடிவெடுத்தார்! அன்றைய தினம் உள்ளாட்சி அமைச்சராக இருந்தவர், இன்றைய முதல்வர் தளபதி ஸ்டாலின்.

எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!

சமூக நீதி உருவாகியே தீர வேண்டும் என்ற வைராக்யத்தோடு அரசியல் களத்தில் புகுந்து அண்ணாவுடன் இணைந்து போரிட்ட கலைஞர், முதல்வராக இருந்த போது, அந்த மூன்று கிராமங்களிலும் தேர்தல் நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியேற்று, அதற்கான பொறுப்பை உள்ளாட்சி அமைச்சர் தளபதி ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்!

தலைவன் இட்ட கட்டளையை தலைமேல் தாங்கி களத்தில் இறங்கிய தளபதி, அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தார்! அவர் தனது பணியைச் செவ்வனே முடிக்க அன்று தனக்கு வலிவூட்ட தேர்ந்தெடுத்த அதிகாரி உதய சந்திரன்! மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டு, அவரது துணையுடன் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் தேர்தல் நடத்தி முடித்தார்!

பல ஆண்டுகாலமாக ஒரு சில ஊராட்சிகளில் தேர்தல் நடத்தாமல் இருக்கும் சூழலைத் தடுத்து நிறுத்த வேண்டும் - என்ற உறுதியுடன், முதல்வர் கலைஞரின் எண்ணத்தை நிறைவேற்றிக் காட்டினார்.

எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!

பா.ஜ.க.வின் அறிவிலித் தலைவர் அறிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் தெளிவாகவே, நடந்த நிகழ்வுகளை விளக்கிட விரும்புகிறோம்.

1996 முதல் 2006 வரை ஆறு மாதத்திற்கு ஒரு தேர்தல் என்ற நிலையில், 19 முறை அங்கு உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஒரு படி மேலே போய், அந்தத் தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும் போராட்டங்கள் நடந்தன! சமூக நீதிக் காவலர் கலைஞர் அதனை ஏற்க மறுத்தார்!"தனித்தொகுதிகளாக அந்த ஊராட்சிகளில் தேர்தல் நடை பெற்றே தீர வேண்டும்” என்றார். முதலமைச்சரின் அந்த தீர்க்கமான முடிவை அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி ஸ்டாலின், தக்க அதிகாரிகளின் துணையோடு, நிறைவேற்றி வெற்றி கண்டார்.

அதன் பின்னர் சென்னை - கலைவாணர் அரங்கில் “சமத்துவப் பெருவிழா" தளபதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த கிராமங்களின் ஊராட்சி மன்றத் தலைவர்களை அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் நேரில் அழைத்து, கேடயங்கள் வழங்கினார்.இப்போது தமிழக முதல்வராக தளபதி ஸ்டாலின் ஆன பிறகு, காந்தி பிறந்த நாளின் போது நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தானே பங்கேற்று, அந்தக் கூட்டத்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் கத்துக்குட்டிக்கு அந்த வரலாறுகளெல்லாம் தெரிய நியாயமில்லை! சமூக நீதியைச் சாய்க்க எண்ணும் கூட்டம் கோடரிக் காம்பாகப் பயன்படுத்திடும் இத்தகைய பேர்வழிகள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதறியாது, வாலறுந்த பல்லிகளின் வால் துடிப்பது போலத் துடிக்கின்றனர்!

அதன் உச்சகட்டத் துடிப்புதான், கடந்த 50 ஆண்டு காலக் கட்டத்தில் எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தி.மு.க. ஆட்சி சிலை வைத்திருக்கிறது? - என்பது போன்ற வரலாற்று அறிவும் தெளிவும் இல்லாத கேள்விகள்!

எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ ? -அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி!

'முரசொலி' தலையங்கம், அந்த அரைக்கால் வேக்காட்டு அரசியல்வாதிக்கு மர மண்டையில் உறைக்கும் வகையில் கழக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரையும் கௌரவித்திட எழுப்பப்பட்ட சிலைகள், மணிமண்டபங்கள் மற்றும் நினைவாலயங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.

இப்போது கூட ஒரு செய்தியாளர் சந்திப்பில், எந்தக் காரணத்தோடும் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைக்க தி.மு.க.வுக்குத் தகுதி கிடையாது. தி.மு.க.வுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி சேர மாட்டோம் - என்று இந்த பிரகஸ்பதி கூறியுள்ளது. பாரதிய ஜனதா, தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டி, தனது அடிப்படைக் கொள்கைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு. குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு தி.மு.க.வுடன் கூட்டு வைத்த வரலாறுகூடத் தெரியாமல், உளறிக் கொட்டும் இந்த உளறுவாயரை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

அவர் ஒரு அரைக்கால் வேக்காடு என்று கருதியிருந்தோம். அதற்குக்கூட தனக்குத் தகுதி இல்லை என்று அடிக்கடி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்பார்கள். எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத இத்தகைய ஜென்மங்களை, எந்த வகையில் சேர்ப்பதோ!

banner

Related Stories

Related Stories