நாடு முழுவதும் இன்று 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 1947ம் ஆண்டு நடந்த சேதப்பிரிவை குறித்து பா.ஜ.க சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகிறார்தான் தேசிப் பிரிவினைக்குக் காரணம் என்பது போல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகளைத் தவறாகச் சித்தரிப்பதா? என பா.ஜ.கவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளோம். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் தியாகங்களையும் அவர்களின் பெருமைகளையும் சிறுமைப்படுத்துவதிலேயே பா.ஜ.க அரசு குறியாக உள்ளது.
இந்த நாசிச அரசு தனது அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்றுகளை தவறாகச் சித்தரித்து வருகிறது. காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்ற தலைசிறந்த தலைவர்கள் குறித்து அவதூறுகளை பரப்புவதை ஒருபோதும் காங்கிரஸ் அனுமதிக்காது. கடுமையாக எதிர்க்கும்" என தெரிவித்துள்ளார்.