இந்தியா

“தேசியக் கொடி வாங்கினால்தான் ரேசனில் பொருட்கள் கிடைக்கும்” : பாஜக ஆளும் மாநிலத்தில் மனிதநேயமற்ற செயல்!

பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை வாங்க வருவோரிடம், 20 ரூபாய் மதிப்புள்ள தேசியக் கொடி ஒன்றையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

“தேசியக் கொடி வாங்கினால்தான் ரேசனில் பொருட்கள் கிடைக்கும்” : பாஜக ஆளும் மாநிலத்தில் மனிதநேயமற்ற செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் உள்ள ஹெம்டா என்ற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர், ரேஷன் பொருட்களை வாங்க வருவோரிடம், 20 ரூபாய் மதிப்புள்ள தேசியக் கொடி ஒன்றையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம், அந்த ரேஷன் கடையின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. மேலும், அந்த கடையின் அழைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த கடையின் ஊழியர், நாங்கள் வேண்டும் என்றே தேசியக் கொடியை விற்பனை செய்யவில்லை.

மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை தான் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். அதாவது, தேசியக் கொடியை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தான் கூறியது என அந்த ஊழியர் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகமே விற்பனை செய்ய சொல்லிவிட்டு, பிரச்சனை வந்தவுடன், ஊழியர்களின் மீது பழிபோட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories