இந்தியா

ஒரு மழைக்கே தாங்கல.. சுக்குநூறாக உடைந்த புதிய பாலம்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.க ஊழல்!

மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்த மழையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலம் சேதமடைந்துள்ளது.

ஒரு மழைக்கே தாங்கல.. சுக்குநூறாக உடைந்த புதிய பாலம்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.க ஊழல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரோட்டுல குழி இருந்து பாத்திருப்பீங்க. ஆனா ரோடே குழியா இருந்து பாத்திருக்கீங்களா. பூகம்பம் வந்தா கூட இப்படி ஆகியிருக்குமா-னு தெரியல. ஆன பா.ஜ.க-வோட ஊழல் இப்படி தலைவிரிச்சு ஆடியிருக்கே.

மோடி அரசு பதவியேற்ற நாட்களில் இருந்தே, பொதுமக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆரம்பத்தில், நாட்டையே மாற்றப்போவதாக ஆட்சியை பிடித்த பா.ஜ.க, நாட்டில் இருந்த இருந்த அரசு துறையை தான் தனியார் துறையாக மாற்றிவருகிறது. இதுமட்டுமின்றி, அரசு நிர்வகித்து வரும் பல்வேறு துறைகளிலும், ஊழல் தலைவிரித்தாடி வருகின்றது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம், பா.ஜ.க அரசின் மோசமான ஆட்சியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அதாவது, போபால் மற்றும் ஹோஷங்காபாத் நகரங்களை இணைக்கும் வகையில் 529 கோடி ரூபாயில், பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால், இந்த பாலம் கட்டப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், தனது முதல் மழைக்கே பெரும் சேதம் அடைந்துள்ளது.

ஒரு மழைக்கே தாங்கல.. சுக்குநூறாக உடைந்த புதிய பாலம்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.க ஊழல்!

இதையடுத்து பா.ஜ.க-வோட ஊழல் இப்படி தலைவிரிச்சு ஆடியிருக்கே.. என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, பா.ஜ.க என்றாலே ஊழல் தான் என்றும், மோடி மாடல் என்றாலே ஊழல் மாடல் தான் என்றும், பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.

அம்மிக் கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல் உள்ளது என் கட்சிக்காரரின் கபாலம் என்று வடிவேலு சொல்வது போல தான், மோசமாக உள்ள இந்த சாலையை பார்க்கும்போது தோன்றுகிறது நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories