இந்தியா

“வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை அழித்ததுதான் பா.ஜ.க.வின் மாஸ்டர் கிளாஸ்” - ராகுல்காந்தி காட்டம் !

வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தை எப்படி அழித்ததுதான் பா.ஜ.க.வின் மாஸ்டர் கிளாஸ் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

“வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை அழித்ததுதான் பா.ஜ.க.வின் மாஸ்டர் கிளாஸ்” - ராகுல்காந்தி காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

47-வது GST கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டீகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. பா.ஜ.க அரசின் இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் எதிர்க்கட்சிகளும் இந்த விலை உயர்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் விலை உயர்ந்துள்ள பொருள்களின் பட்டியலை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு, இந்த விலை உயர்வை 'கப்பர் சிங் டேக்ஸ்' என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

மேலும், இது குறித்து கூறியுள்ள அவர், "அதிக வரி, வேலை இல்லை. ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை எப்படி அழிப்பது என்பது தான் பா.ஜ.க.வின் மாஸ்டர் கிளாஸ்." என விமர்சித்துள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories