பொதுவாக இந்தியாவில் திருமணம் என்றாலே விழாதான். அதிலும் வட இந்தியர்கள் தங்கள் இல்ல திருமணங்களை ஒரு திருவிழா போல் கொண்டாடுவார்கள். மெஹெந்தி, சங்கீத், ரிசப்ஷன் என்று சுமார் ஒரு வாரகாலமாக அவர்கள் தெருவே விழாக்கோலம் பூண்டிருக்கும். மேலும், திருமண வீட்டுக்காரர் பத்திரிகை, ஆடை எடுப்பது, நகை எடுப்பது என்று கஷ்டப்பட்டு அதற்கான வேலைகளை நடத்தி முடிப்பர்.
இப்படி எல்லாவற்றையும் சரியாக முடித்து பிரச்னை வராமல், ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்று திருமண வீட்டுக்கார்கள் மனதில் சந்தோசம் இருந்தாலும், எங்கயோ ஒரு பயம் இருந்து கொண்டு தான் இருக்கும். மனிதர்களால் வரும் பிரச்னைகள் இடையூறுகளை கூட எப்படியோ சமாளித்து விடலாம். ஆனால் இயற்கை செய்தால் ?. நாம் தான் அதற்கு அடங்கி போக வேண்டும். அதற்கு உதாரணமாக தான் மத்திய பிரதேசத்தில் நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்காக மணமக்கள், அலங்காரம் செய்து, உறவினர்கள் சீர்வரிசைகளோடு நின்று, இசைக்குழுவிற்கு ஏற்பாடு செய்து தயாராக இருந்தார்கள். ஆனால் பருவமழை காரணமாக எதிர்பாராத நேரங்களில் எல்லாம் மழை பெய்து வருவைத்தால், அந்த நிகழ்வின்போதும் திடீரென்று மழை பெய்துள்ளது.
இதனால் திகைத்து நின்ற உறவினர்கள், இன்று திருமணம் நடைபெறாமல் போய்விடுமோ என்று நினைத்தனர். அந்த சமயத்தில் ஒரு Village விஞ்ஞானி ஒருவர், ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். அதன்படி திருமண வீட்டார்கள் ஊர்வலத்திற்கு தயாரானார்கள். அப்போது ஒரு பெரிய தார்ப்பையை எடுத்து அவர்கள் அனைவர் மீதும் போர்த்தி ஊர்வலத்திற்காக சாலையில் நடத்தி கூட்டி செல்லப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.