மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நுர்ஜமால் ஷேக் என்பவர் வேலைக்காக நீண்ட வருட காண்ட்ராக்ட்டில் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அங்கு சில சில மாதங்களில் அவர் மனைவி ஷாஹினா கதும் அவரிடம் பேசுவதை குறைத்துள்ளார்.
நுர்ஜமால் ஷேக் தான் வெளிநாடு செல்லும் முன் தன் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளார். மேலும் வங்கி கணக்கில் பணமும் வைத்துள்ளார். இதை அறிந்த அவரது மனைவி இன்ஷுரன்ஸ் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கான உயிருடன் இருக்கும் தனது கணவர் இறந்துவிட்டதாக போலியாக சான்றிதழ் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதைக் வைத்து இன்ஷுரன்ஸ் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் 5 வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பிய நுர்ஜமால் ஷேக்க்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக போலிஸை அணுகிய அவர், தன் மனைவி போலி சான்றிதழ் மூலம் வங்கியில் இருந்த பணம் மற்றும் இன்சூரன்ஸ் பணம் என 25 லட்சத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியதாக புகார் அளித்துள்ளார்.
மேலும், தனது மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்து அவருடன் தன் பணத்தை எடுத்து சென்றுள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.