கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள நாகமங்கலா நகரின் புறநகரில் உள்ள சாமராஜநகர் - ஜீவர்கி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையில், பாண்டவபுரா தாலுகாவில் உள்ள எலிகரே கிராமத்தில் வசிக்கும் சுவாமி, கண்ணூர் கிராம நிர்வாக அதிகாரி தேவ ராஜு, கனகனமரடி கிராம உதவியாளராக இருந்த மஞ்சுநாத், தாமரஹள்ளி கிராம உதவியாளராக இருப்பவர் சுவாமி மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரும் காரில் சென்றுள்ளனர்.
அப்போது இரவு நேரம் என்பதால் காரை வேகமாக இயக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த சரக்கு லாரி மீது கார் மோதியத்தில் பலத்த சத்ததுடன் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை விபத்தைச் சென்று நேரில் பார்த்த போது, தேவராஜு, மஞ்சுநாத் மற்றொரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய காயத்திரி சுவாமி மேல் சிகிச்சைக்காக பிஜி நகரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் உடல்களை நாகமங்கலா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நாகமங்கலா டவுன் போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
இதில் போலிஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த தேவராஜு பாண்டவபுரத்திற்கு இரண்டு கிராம உதவியாளர்கள் மற்றும் ஒரு விவசாய கூலித் தொழிலாளியுடன் நில அளவை வேலைக்காக திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.