இந்தியா

“கடவுள் பக்தியில் புனித நீரோடு சிலையை விழுங்கிய பக்தர்?” : தொண்டையில் சிக்கிய சிலையால் நடந்த விபரீதம்!

45 வயதுடைய நபர் ஒருவர் கோயிலில் உள்ள புனித நீருடன் சேர்ந்து சிறிய கிருஷ்ணர் சிலையை விழுங்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கடவுள் பக்தியில் புனித நீரோடு சிலையை விழுங்கிய பக்தர்?” :  தொண்டையில் சிக்கிய சிலையால் நடந்த விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில், 45 வயது மிக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருப்பதோடு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை அணுகினார். எனவே அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு X-Ray எடுத்து பரிசோதனை செய்தனர். X-Ray ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“கடவுள் பக்தியில் புனித நீரோடு சிலையை விழுங்கிய பக்தர்?” :  தொண்டையில் சிக்கிய சிலையால் நடந்த விபரீதம்!

அதில், அவரது தொண்டையிலுள்ள உணவு குழாயில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று சிக்கியுள்ளது தெரிந்தது. பின்னர் இது குறித்து அவரிடம் விசாரித்த போது, தான் எதையும் உட்கோள்ளவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் கேட்கையில், தான் வழக்கமாக அருகிலிருக்கும் ஒரு கோயிலில் நீராடி, அந்த நீரை பருகுவதாக தெரிவித்தார்.

“கடவுள் பக்தியில் புனித நீரோடு சிலையை விழுங்கிய பக்தர்?” :  தொண்டையில் சிக்கிய சிலையால் நடந்த விபரீதம்!

இதனையடுத்து, அவருக்கு ENDOSCOPY என்ற சிகிச்சை மூலம் தொண்டையில் சிக்கியிருந்த பொருளை தொண்டை வழியே வெளியே எடுத்தனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருப்பதாக அணுகினார்.

அவரை பரிசோதனை செய்ததில், தொண்டையில் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையின்போது உணவுக் குழாயில் சிலையின் இடது கால் சிக்கிக் கொண்டதால் எங்களுக்கு மிகவும் கடினமாகவும் சவாலாக இருந்தது. எனவே எதை சாப்பிட வேண்டுமென்றால் பார்த்து சாப்பிடுங்கள், பருகுங்கள்" என்றனர்.

banner

Related Stories

Related Stories