இந்தியா

விருந்துக்கு செல்வதாக கூறி கடத்தப்பட்ட சிவசேனா MLA-க்கள்: தப்பி வந்த MLA-வால் வெளிவந்த பகீர் உண்மை!

மஹாராஷ்டிராவில் விருந்துக்கு செல்வதாக ஏமாற்றி சிவசேனா MLA-க்கள் கடத்திச்செல்லப்பட்டுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது

விருந்துக்கு செல்வதாக கூறி  கடத்தப்பட்ட  சிவசேனா MLA-க்கள்: தப்பி வந்த  MLA-வால் வெளிவந்த பகீர் உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள் அசாம் சென்றுள்ளது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த எம்.எல்.ஏக்கள் பலரை பா.ஜ.க ஏமாற்றி அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடமிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தப்பிவந்த எம்.எல்.ஏ கூறிய தகவலின் படி, மகாராஷ்டிராவில் சட்டமேலவைத்தேர்தலில் வாக்களித்தப் பிறகு முடிவுக்காக எம்.எல்.ஏக்கள் அனைவரும் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஏக்நாத் ஷிண்டே தானேவில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறி சிவசேனா எம்.எல்.ஏ-க்களை அழைத்துச் சென்றுள்ளார்.

uddhav thackeray
uddhav thackeray

3 பெரிய கார்களில் சென்ற அவர்கள் , தானேவுக்கு செல்லாமல் குஜராத் நோக்கிச் சென்றுள்ளனர். இதனால் அங்கிருந்த எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பியபோது, முக்கியமான ஒருவரை பார்க்கப் செல்வதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். அப்போது கார் சுங்கசாவடியில் நின்றபோது கைலாஷ் பாட்டீல் என்ற எம்.எல்.ஏ கழிவறை செல்வதாக கூறி காரில் இருந்து இறங்கி பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

kailas patil
kailas patil

இதன் காரணமாக அவரை விட்டு விட்டு பிற எம்.எல்.ஏக்களோடு கார் குஜராத்துக்கு சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து தப்பிய எம்.எல்.ஏ கைலாஷ் பாட்டீல் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து இது குறித்து கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கைலாஷ் பாட்டீல் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி பிடிக்காமல் சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவோடு சென்றதாக பா.ஜ.க ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் அவர்களை ஏமாற்றி கட்டாயப்படுத்தி ஏக்நாத் ஷிண்டே அழைத்துச் சென்றிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன் மூலம் மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதிசெய்து வருவதாக குற்றச்சட்டு வைக்கப்பட்டநிலையில் இந்த சம்பவம் அதை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories