இந்தியா

Layer Shot விளம்பரத்தை ஒளிபரப்ப தடை செய்த ஒன்றிய அரசு.. காரணம் என்ன?

ஆபாசத்தைத் தூண்டும் வகையில் இருக்கும் லேயர் சாட் வாசனைத் திரவிய விளம்பரத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

Layer Shot விளம்பரத்தை ஒளிபரப்ப தடை செய்த ஒன்றிய அரசு.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஒளிபரப்பாகும் சென்ட் விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவருவது வாடிக்கையாகிவருகிறது. இந்நிலையில் Layer Shot என்ற சென்ட் விளம்பரம் ஆபாசத்தை தூண்டும் வகையில் இருப்பதாக அதற்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

லேயர் சாட் என்ற சென்ட் தயாரிப்பு நிறுவனம், தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தும் விதமாக விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஆபாசங்களுடன், இரட்டை அர்த்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து இந்த விளம்பரத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தனர். மேலும் இந்த விளம்பரத்தைத் தடை செய்ய வேண்டும் என டெல்லி பெண்கள் நல ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்புகள் வந்ததை அடுத்து ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்,லேயர் சாட் என்ற சென்ட் விளம்பரத்திற்குத் தடை விதித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், "லேயர் சாட் விளம்பரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories