கொரோனா காலத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கொரோனோ ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அதுசார்ந்த தொழிலாளர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
அதனால், இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும் இதனை விசாரித்த நீதிமன்றம் பாலியல் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்பொருட்கள் வழங்கப்பட வேண்டும் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு தொடர்பாகநீதிபதி எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “பாலியல் தொழிலாளர்களும் மனிதர்களே. பாலியல் தொழிலாளர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர் எல்லா உரிமைகளுடன் வாழ உரிமை உள்ளது.
அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. கொரோனா பாதிப்பின் போது இந்தியாவில் 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களிடம் இருப்பிட சான்றிதழ் குறித்து கேட்க கூடாது. தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு நிறுவனத்தில் அவர்கள் வகைப்படுத்தப்பட்டு இருந்தாலே, ஆதார் அட்டையை வழங்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.