கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பினர் சார்பில், இந்து மகா சம்மேளனத்தில் (கேரள இந்து மாநாடு) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பா.ஜ.க ஆதரவாளர் துர்காதாஸ் சிசுபாலன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய அவர், தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக அரபு நாடுகளுக்கு மலையாள செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாது முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு அவர் தெரிவித்திருகிறார்.
மேலும் மலையாள முஸ்லிம் பெண்களுக்கு எதிகாரவும் வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் செவிலியர்கள் பற்றி அவதூறு கருத்தைப் பேசிய துர்காதாஸூக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் எழுந்தது.
மேலும் வளைகுடாவில் உள்ள செவிலியர் அமைப்பினர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், முஸ்லிம் வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்ததற்காக மலையாள மிஷன் கத்தார் (Malayalam Mission Qatar) நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
துர்காதாஸ் மூத்த கணக்காளராக Narang Projects Qatar நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவரை நீக்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மலையாள மிஷன் கத்தார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெண்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் துர்காதாஸ் மீது வழக்குப்பதிந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் துர்காதாஸ் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரனிடம் இருந்து "வளைகுடா நாடுகளில் சிறந்த சமூக மற்றும் கலாச்சார பணிகளுக்கான" விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.