இந்தியா

’பா.ஜ.க ஆட்சியில பெட்ரோல் போட்டு மாளல..’ - சொந்தமாக குதிரை வாங்கி வேலைக்குச் செல்லும் நபர்!

பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் சொந்தமாகக் குதிரை வாங்கி வேலைக்குச் சென்று வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

’பா.ஜ.க ஆட்சியில பெட்ரோல் போட்டு மாளல..’ - சொந்தமாக குதிரை வாங்கி வேலைக்குச் செல்லும் நபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தற்போது 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் பெட்ரோல் விலை உயராமல் இருக்கிறது. தேர்தல் முடிந்துவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் விலை உயரக்கூடும் என்ற அச்சத்திலேயே மக்கள் உள்ளனர்.

இந்த தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வைச் சமாளிக்க முடியவில்லை என கூறி மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் சொந்தமாக குதிரை வாங்கி தினமும் வேலைக்குச் சென்று வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் யூசப் ஜிகர். இவர் கல்லூரி ஒன்றில் லேப் அசிஸ்டென்டாக வேலை பார்த்து வருகிறார். வீட்டிலிருந்து கல்லூரிக்குத் தினமும் 15 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார்.

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அவரால் விலையை உயர்வைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் ரூ. 40 ஆயிரத்திற்கு குதிரை ஒன்றை வாங்கி தினமும் அதில் கல்லூரிக்குச் சென்று வருகிறார்.

இவர், குதிரையில் வேலைக்குச் சென்றுவரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவரது இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories