இந்தியா

கொள்ளையடித்த ₹1 கோடியில், ₹1 லட்சத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய திருட்டு கும்பல்: சிக்கியது எப்படி?

துப்பாக்கி முனையில் ரூ.1 கோடி கொள்ளையடித்த கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

கொள்ளையடித்த ₹1 கோடியில், ₹1 லட்சத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய திருட்டு கும்பல்: சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி, ரோகினி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் ஊழியர்கள் இரண்டு பேர் ரூ.1.1 கோடி பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று துப்பாக்கியைக் காட்டி அவர்களிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்களின் அடையாளங்கள் கிடைத்துள்ளது. பின்னர் சம்பவம் நடந்து ஒருவாரம் கழித்து சாந்தினி சவுக் மார்கெட் பகுதியில் அந்த கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

பிறகு அவர்களிடம் விசாரணை செய்தபோது கொள்ளையடித்த பணத்திலிருந்து ரூ.1 லட்சத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதும் தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரமும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நகைக்கடை ஒன்றில் முன்னாள் ஊழியராக இருந்துள்ளார். தொழிலதிபர்களின் ஊழியர்கள் அந்த நகைக்கடையில் பணம் வாங்கிக் கொண்டு வருவது குறித்து இவர்தான் தனது கூட்டாளிகளுக்கு தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories