இந்தியா

“கறிக்கடை கத்தியால் தந்தை மகனை குத்திய பழ வியாபாரி” : மாவுக்கட்டு போட்ட மும்பை போலிஸ் - நடந்தது என்ன?

பணத்தகராறில் தந்தை மற்றும் மகனை குத்திய பழ வியாபாரியான இளைஞனை மும்பை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

“கறிக்கடை கத்தியால் தந்தை மகனை குத்திய பழ வியாபாரி” : மாவுக்கட்டு போட்ட மும்பை போலிஸ் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொலை மற்றும் கொலை முயற்சி செய்த வழக்கில் தெற்கு மும்பையைச் சேர்ந்த இளம் பழ வியாபாரியை மும்பை குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து போலிஸ் காவலில் வைத்திருக்கிறார்கள்.

பாபுஜி குரேஷி (55), அவரது மகன் சோட்டு குரேஷி (30) இருவரும் நல் பஜாரில் பல ஆண்டுகளாக பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களது கடைக்கு அருகே சோஹ்ரப் குரேஷி என்பவரும் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் அனைவருமே உத்தர பிரதேசத்தின் பதோஹி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பு சோஹ்ரப் குரேஷிக்கு 35,000 ரூபாய் மதிப்புடைய பழப்பெட்டிகளை பாபுஜி கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்களில் கொடுத்துவிடுவதாகச் சொல்லி பழங்களை வாங்கிவிட்டு, ஆனால் அதற்கான பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்திருக்கிறார் சோஹ்ரப்.

பாபுஜியும் அவரது மகனும் பணத்தை கேட்டு வந்த போது அவர்களை சோஹ்ரப் தொடர்ந்து புறக்கணித்திருக்கிறார். இப்படி இருக்கையில், கடந்த சனிக்கிழமையன்று காலை நினைவூட்டிய பாபுஜியிடம் பணத்தை கொடுக்க மறுத்ததோடு அவரை மிரட்டவும் செய்திருக்கிறார் சோஹ்ரப்.

மேலும் 9.45 மணியளவில் மட்டன் வெட்டும் கத்தியுடன் பாபுஜியின் கடைக்கு வந்த சோஹ்ரப் அவரது வயிற்றிலேயே குத்தியதுடன், அதனை தடுக்க வந்த சோட்டு குரேஷியையும் சோஹ்ரப் கத்தியால் குத்தியிருக்கிறார்.

இதனைக் கண்டது அப்பகுதி மக்கள் கூடியதால் அவ்விடத்தை விட்டு சோஹ்ரப் குரேஷி தப்பியோடியிருக்கிறார். பின்னர் கத்தியால் குத்தப்பட்ட தந்தை மகன் இருவரும் மீட்டு ஜே ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு போலிஸிடமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில், பாபுஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். காயமடைந்த அவரது மகன் சோட்டு குரேஷி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனிடையே, தப்பியோடிய சோஹ்ரப் குரேஷிக்கு எதிராக கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மல்வானி பகுதியில் உள்ள தனது சகோதரன் வீட்டில் பதுங்கியிருந்த சோஹ்ரப் குரேஷியை மடக்கிப் பிடித்து கைது செய்திருக்கிறார்கள் போலிஸார். அதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலிஸ் காவலில் எடுக்கப்பட்ட சோஹ்ரப் குரேஷியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories