இந்தியா

”இனி அரசு பேருந்துகளில் இவையெல்லாம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும்” - கேரள அரசு திடீர் அறிவிப்பு!

புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

”இனி அரசு பேருந்துகளில் இவையெல்லாம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும்” - கேரள அரசு திடீர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாகப் பேச மற்றும் செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்கத் தடை விதிக்கப்படுகிறது என கடந்த மாதம் ஜனவரியன்று இந்திய ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். அதேபோல் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாகப் புகார் அளித்தால் உடனே ரயில்வே போலிஸார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகளிடம் ரயில்வே ஊழியர்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். முதியவர்கள், ஊனமுற்றோர், பெண் பயணிகளுக்கு ரயில்வே ஊழியர்கள் உதவியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இப்படி இருக்கையில், கேரள அரசு பேருந்து ஒன்றி பயணிகள் சிலர் சத்தமாக பாட்டு கேட்டது சகப் பயணிகளிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.

இப்படியான புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

அதன்படி இனி கேரளாவில் உள்ள அரசு பேருந்துகளில் பயணிகள் எவரும் சத்தமாக பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது. விதியை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories