இந்தியா

டிரைவர் தூங்கியதால் விபரீதம்? ஆற்றில் கவிழ்ந்த கார்; மணமகன் உட்பட 9 பேர் பலி; ராஜஸ்தானில் கோர சம்பவம்!

சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் மணமகன் உட்பட 9 பேர் உயிரிழந்தற்கு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிரைவர் தூங்கியதால் விபரீதம்? ஆற்றில் கவிழ்ந்த கார்; மணமகன் உட்பட 9 பேர் பலி; ராஜஸ்தானில் கோர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனது திருமணத்துக்காக சென்றுக் கொண்டிருந்த போது மணமகன் உட்பட 9 பேர் விபத்தில் சிக்கி பலியான கோர சம்பவம் ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.

பர்வடாவில் இருந்து மணப்பெண்ணை அழைத்து வருவதற்காக நேற்று இரவு மணமகனும் அவரது உறவினர்களும் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கோட்டாவில் உள்ள நயபுரா காவல் நிலைய கட்டுப்பட்டுக்கு உட்பட்ட சாம்பல் ஆறு வழியாக சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது.

இதனால் சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்திருக்கிறது. இதில் மணமகன் உட்பட 9 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று காலை அரங்கேறியிருக்கிறது.

தகவல் அறிந்த கோட்டா போலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்திருக்கிறார்கள். விசாரணை நடத்தப்பட்டதில், உஜ்ஜயினில் நடக்கவிருந்த திருமணத்துக்காக சென்ற போது காலை 7.30 மணியளவில் விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள கோட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரையில் மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டிரைவர் தூங்கியதால் விபரீதம்? ஆற்றில் கவிழ்ந்த கார்; மணமகன் உட்பட 9 பேர் பலி; ராஜஸ்தானில் கோர சம்பவம்!

மேலும், கோர சம்பவம் குறித்து அறிந்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், “மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு பணித்திருக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories