தலைநகரான டெல்லியில் உள்ள உத்தம் நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில் நடைபெற இருந்த கொள்ளையை போலிஸார் தடுத்திருக்கிறார்கள்.
ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் கொள்ளை முயற்சி தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையில் ஈடுபட இருந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க சப்பாத்தி செய்வதற்கான தவாவைப் பயன்படுத்தியுள்ளார். இதனையடுத்து கொள்ளை முயற்சி குறித்து தகவல் கிடைத்ததும் போலிஸார் சிசிடிவி காட்சிகளை மீட்டு விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதில், நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்ததில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முற்பட்டத்து உத்தம் நகரைச் சேர்ந்த அஷ்ரத் அலி என தெரிய வந்தது. பின்னர், அவரது வீட்டில் இருந்து அலியை மடக்கிப் பிடித்ததோடு, அவர் வசம் இருந்த வாணலியையும் மீட்டனர்.
விசாரணையில், அஷ்ரத் அலி மதுவுக்கு அடிமையாகி இருப்பதும், தான் நிதி நெருக்கடியில் இருந்ததால் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றதாகவும் போலிஸிடம் கூறியுள்ளார்.
பின்னர், அஷ்ரத் அலி மீது 380 மற்றும் 511 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.