இந்தியா

”அந்த 20 நொடிகள்தான்” : மகனின் கல்யாணத்தின் போது இறந்த தாய் - இரங்கல் கூட்டமான திருமண கொண்டாட்டம்!

திருமண கொண்டாட்டத்தின் போது தனது மகனின் கையிலேயே தாய் சரிந்து விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

”அந்த 20 நொடிகள்தான்” : மகனின் கல்யாணத்தின் போது இறந்த தாய் - இரங்கல் கூட்டமான திருமண கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனது மகனின் திருமண ஊர்வலத்தின் போது நடனமாடிக் கொண்டிருந்த தாய் மரணமடைந்த நிகழ்வு ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.

ஆல்வர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வு திருமண வீட்டை சோகம் சூழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடந்த இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலானதோடு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

55 வயதான நீலம் என்ற பெண்மணி தனது மகனின் திருமண ஊர்வலமான பாரத் எனும் நடன நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

அப்போது மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த நீலம் திடீரென மணமகனான நீரஜ்ஜின் கையை பிடித்தபடி சரிந்து விழுந்து மயங்கியிருக்கிறார்.

உடனடியாக அவரை தாங்கி பிடித்த நீரஜ், தனது தாய் நீலமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் நீலம் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனக் கூறியிருக்கிறார்கள்.

இதனையறிந்த நீரஜ் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாகினர். ஏற்கெனவே நீலம் இதயம் தொடர்பான நோய்க்கு மருந்துகளை உட்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேசியுள்ள உறவினரான தைனிக் பாஸ்கர் என்பவர், நீலம் இறப்பதற்கு முன் சுமார் 20 விநாடிகளுக்கு அவரது மகன் நீரஜின் கையை பிடித்துக் கொண்டு நடனமாடினார் எனக் கூறியுள்ளார்.

திருமண கொண்டாட்டத்தில் இருந்து வந்த குடும்பத்தினர் ரங்கல் கூட்டம் நடத்தும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories