கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறினர். இதைக் கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது.
இதையடுத்து, திருமண நாளில் தனது மகள் இறந்த துக்கத்திலும் அவரின் பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
இதுபற்றி அறிந்த கர்நாடக அமைச்சர், "சைத்ராவுக்கு இது மிகவும் முக்கியமான நாள். ஆனால் விதி வேறு மாதிரியாக நினைத்துவிட்டது. இதயத்தை நொறுக்கும் இந்த சோகத்திலும் அவரது பெற்றோர்கள் உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.