இந்தியா

பெகாசஸ் விவகாரம்: “ ‘New Version’ இருக்கானு கேளுங்க..!” - பிரதமர் மோடியை கிண்டலடித்த ப.சிதம்பரம் !

பெகாசஸ் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடியைக் கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

பெகாசஸ் விவகாரம்: “ ‘New Version’ இருக்கானு கேளுங்க..!” - பிரதமர் மோடியை கிண்டலடித்த ப.சிதம்பரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை வெடித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடியதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டின.

இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்துக் கடந்த முறை நடைபெற நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கேள்விகளை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2 பில்லியன் டாலர் அளவிலான இந்தியா- இஸ்ரேல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளதால் இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாகியுள்ளது.

இந்நிலையில், 2024ம் தேர்தலுக்காகக் கூடுதல் ஸ்பைவேர் பெற 4 பில்லியின் டாலர் கூட கொடுக்க முடியும் என கூறி ஒன்றிய பா.ஜ.க அரசை ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டரில், "இந்தியா- இஸ்ரேல் இடையிலான உறவில் புதிய இலக்கை எட்ட இது சிறந்த நேரம் என பிரதமர் மோடி இரண்டு நாட்டின் 30 வருட நட்பு குறித்து தெரிவித்துள்ளார். உண்மையிலேயே, அவர்கள் பெகாசஸ் ஸ்பைவேரின் நியூ வெர்சன் வைத்துள்ளீர்களா? என இஸ்ரேலிடம் கேட்க இது சிறந்த நேரம்தான்.

கடந்த முறை 2 பில்லியன் டாலர் அளவில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த தடவை அதைவிட சிறப்பாக செய்ய முடியும். 2024 தேர்தலுக்காக கூடுதம் ஸ்பைவேர் பெற முடியும் என்றால், அதற்கான நாம் 4 பில்லியன் டாலர் கூடு கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories