இந்தியா

“இங்கு ஜனநாயகமே இல்லை.. மக்கள் மூச்சு விடமுடியாமல் திணறுகிறார்கள்” : திரிபுரா பா.ஜ.க MLA சரமாரி தாக்கு !

பா.ஜ.க ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பது திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இங்கு ஜனநாயகமே இல்லை.. மக்கள் மூச்சு விடமுடியாமல் திணறுகிறார்கள்” : திரிபுரா பா.ஜ.க MLA சரமாரி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் முதல்வராக பிப்லப் குமார் தேவ் உள்ளார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்த விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவை அதிகரித்துள்ளது. பா.ஜ.க.வின் மோசமான ஆட்சியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றர்.

இதனால், அம்மாநிலமக்கள் வெளிப்படையாகவே பா.ஜ.க ஆட்சியை விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரே ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினரான சுதிப் ராய் பார்மன் எனப்வர்தான் சொந்த கட்சியின் ஆட்சியையே கடுமையாக தாக்கியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் சுதிப் ராய் பார்மன், “திரிபுரா ஆட்சியில் வெளிப்படை தன்மை இல்லை. ஜனநாயகமே கேள்விக்குறியாகிவிட்டது. இந்த ஆட்சியால் மக்கள் மூச்சு திணறி வருகின்றனர். ஆளும் அரசு மக்களின் நலனை நிறைவேற்றவில்லை. இதனால் பா.ஜ.க ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே இப்படி கடுமையாகச் சாடி பேசியிருப்பது இம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவிற்குப் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories