இந்தியாவில் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களின் ப்ரீ பெய்டு திட்டத்திற்கான காலத்தை 28 நாட்கள் மட்டுமே நிர்ணயித்து வருகின்றன. உதாரணமாக, ஒரு மாதத்திற்கு செல்போன் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் மட்டுமே இந்த கட்டணத்திற்கான காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 13 முறை முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.
இது குறித்து பயனாளிகள் பல மாதங்களாகப் புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தான் ப்ரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் நிர்ணயிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களின் திட்ட வவுச்சர், டாரிப் வவுச்சர், காம்போ ஆப்பர் உள்ளிட்ட அனைத்திலும் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் பயனாளிகளுக்கு மாதம் இரண்டு நாட்கள் கூடுதலாகப் பயன்படுத்த முடியும். மேலும் ஏற்கனவே ஏர்டெல், வோடஃபோன், ஜியோ போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் டிராயின் உத்தரவை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.