மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஷிரூரில் சுற்றுலாவுக்கு சென்ற பெண்களும் குழந்தைகளும் மினி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் அஞ்சி நடுங்கினர்.
அப்போது பயணிகளில் ஒரு பெண் தாமாக முன்வந்து பேருந்தை இயக்குவதாகச் சொல்லி பேருந்தை ஓட்டியவர் முதலில் அருகே இருந்த மருத்துவமனையில் ஓட்டுநரை அனுமதித்து விட்டு, பின்னர் பிற பயணிகளை அவரவர் நிறுத்தங்களில் கொண்டு சேர்த்திருக்கிறார்.
சுமார் 10 கிலோ மீட்டர் வரையில் பேருந்தை இயக்கிய அந்த பெண்ணின் பெயர் யோகிதா. 45 வயதான அப்பெண்ணுக்கு கார் ஓட்டும் பழக்கம் இருப்பதால் பேருந்தை ஓட்டியிருக்கிறார்.
எந்த அசம்பாவிதமும் ஏற்படுத்தாது அனைவரையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டதால் பாராட்டை பெற்றுள்ளார் யோகிதா.
ஜனவரி 7ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.