இந்தியா

திருமணமான கையோடு சைரனை அலறவிட்டபடி புதுமண ஜோடி ஆம்புலன்ஸில் ஊர்வலம் : கேரளாவில் நடந்தது என்ன?

புதிதாக திருமணமான தம்பதி ஆம்புலன்ஸில் ஊர்வலமாகச் சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான கையோடு சைரனை அலறவிட்டபடி புதுமண ஜோடி ஆம்புலன்ஸில் ஊர்வலம் : கேரளாவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அவசர ஊர்தியான ஆம்புலன்ஸின் புதுமண தம்பதியை வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கட்டணம் பகுதியில்தான் இந்த நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில், புதிதாக திருமணமான அந்த ஜோடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றிருக்கிறார்கள். இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஆம்புலன்ஸின் உரிமையாளருக்கு மோட்டார் வாகனத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருமணமான கையோடு சைரனை அலறவிட்டபடி புதுமண ஜோடி ஆம்புலன்ஸில் ஊர்வலம் : கேரளாவில் நடந்தது என்ன?

மேலும் மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன்னுடையை உரிமத்தை இழக்கும் அளவுக்குச் சென்றுள்ளது இந்த விவகாரம். இது தொடர்பாக பேசியுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் சஜி பிரசாத், இது போன்ற செயல்கள் சட்டத்துக்கு விரோதமானது என விதி இருக்கிறது. ஆகையால் சம்மந்தபட்ட ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் கேரளாவின் சுகாதாரத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களின் கவனத்திற்கு சென்றிருப்பதாகவும், ஆம்புலன்ஸில் சென்றது தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் என்றும், புதுமண தம்பதி ஆம்புலன்ஸில் வந்தது மட்டுமே உண்மை. சைரன் ஒலி ஏதும் எழுப்பப்படவில்லை என புகாருக்கு ஆளான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறியுள்ளதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories