கர்நாடகாவின் ஷிவமோக மாவட்டத்தின் ஹோசனகராவில் இருந்து ஷிரூரு பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்தில் பழங்குடி குடும்பம் ஒன்று பயணித்திருக்கிறது.
அவர்களிடம் பயணச்சீட்டு விநியோகிக்கும் போது அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்து ஓசை வந்ததும் நடத்துனர் என்னவென்று பரிசோதித்திருக்கிறார். அதில் கோழிக்குஞ்சு ஒன்று இருந்திருக்கிறது.
இதனையடுத்து கோழிக்குஞ்சுக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என நடத்துநர் கூறியிருக்கிறார். ஆனால் அந்த பழங்குடி குடும்பத்தினர் கோழிக்கு டிக்கெட் எடுக்க மறுத்திருக்கிறார்கள்.
ஆனால் விதிமுறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறியதை அடுத்து கோழிக்குஞ்சுக்கும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. வெறும் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட கோழிக்குஞ்சுக்கான பேருந்து கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இதனைக் கண்டு பழங்குடியின குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும் கோழிக்குஞ்சுக்கும் சேர்த்து எடுக்கப்பட்ட பயணச் சீட்டு தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.