மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் லவூல் என்ற கிராமத்தில் குரங்கு கூட்டம் ஒன்று தொடர்ச்சியா தெருவில் சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை கொலை செய்து வந்துள்ளது. இது அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குரங்குகளின் வெறிச்செயல் குறித்து கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் இரண்டு குரங்குகளைப் பிடித்துள்ளனர்.
இதுவரை இந்த குரங்குகள் 80க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கடித்து, மரத்தின் மேலே இருந்து கீழே வீசி கொலை செய்துள்ளதாக அக்கிராம மக்கள் கூறுகிறனர். இதற்கு காரணம் சில வாரங்களுக்கு முன்பு குரங்கு குட்டி ஒன்றை நாய்கள் கூட்டம் கடித்துக் கொலைசெய்துள்ளது.
இதற்குப் பழிவாங்கவே தொடர்ந்து நாய்களைக் குரங்குகள் கூட்டம் கொலை செய்து வந்துள்ளது என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். குரங்கு கூட்டமொன்று பழிவாங்கும் நோக்கில் 80 நாய்க்குட்டிகளை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.