ராஜஸ்தான் மாநிலம், ஹனுமங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் சிறுவனை எப்படியாவது போதை பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என நினைத்த சிறுவனின் பெற்றோர் அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.
அங்கு அச்சிறுவன் சில நாட்கள் இருந்துவிட்டு கிராமத்திற்கு வந்துள்ளார். மேலும் பெற்றோர் தன்னை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியதால் அவர்கள் மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் தன்னை அங்கு அனுப்பிவைத்து விடுவோர்களோ என நினைத்துப் பெற்றோரைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். பிறகு சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த பெற்றோரை வீட்டிலிருந்து கோடரியால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
அப்போது, இதை தடுக்க முயன்ற சகோதரனையும் அந்தச் சிறுவன் தாக்கியுள்ளார். பிறகு கோடரியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த அச்சிறுவன் பெற்றோரைக் கொலை செய்துவிட்டதாக கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிராம மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் பெற்றோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.