இந்தியா

நாடாளுமன்றத்துக்கு லீவ் எடுக்காம வாங்க : சத்தம் போட்ட பிரதமர் மோடி - யாரை பார்த்துச் சொன்னார் ?

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை தொனியில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு லீவ் எடுக்காம வாங்க : சத்தம் போட்ட பிரதமர் மோடி - யாரை பார்த்துச் சொன்னார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நவம்பர் 29ம் தேதி தொடங்கிய நடப்பாண்டுக்கான குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 23ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இதில், அமித்ஷா, பியுஷ் கோயல், ஜெய்சங்கர், பிரகலாத் ஜோஷி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்துக்கு லீவ் எடுக்காம வாங்க : சத்தம் போட்ட பிரதமர் மோடி - யாரை பார்த்துச் சொன்னார் ?

அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ஒழுங்காக வராத எம்பிக்களை நோக்கி உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையேல் மாற்றங்கள் நிகழும்.

மசோதாக்கள் வந்தாலும் வரவில்லை என்றாலும் அனைவரும் சபையில் இருப்பது கட்டாயம் என்றும் குழந்தைகளுக்கு பாடமெடுப்பது போன்று மீண்டும் மீண்டும் சொல்ல முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories