மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி.
அப்போது, “வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது தொடர்பான தரவுகள் இல்லை என்று கூறுகிறது.
பஞ்சாப் மாநில அரசிடம் சுமார் 403 பேர் பட்டியல் உள்ளது. அவர்களுக்கு பஞ்சாப் அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. அதில் 152 பேர் குடும்பத்துக்கு வேலை வழங்கியுள்ளது. அதுபோக மற்ற மாநிலத்தைச் சேர்ந்த 100 பேர் பட்டியல் எங்களிடம் உள்ளது.
நாங்கள் அரசுக்கு பட்டியல் வழங்க தயாராக இருக்கிறோம். விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ஏன் இழப்பீடு வழங்க தயங்குகிறார்?
விவசாயிகள் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்கவில்லை. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நியாயமான ஒரு தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.