தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கடந்த வியாழனன்று போதைப் பொருட்கள் தடுக்கும் விதத்தில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி, அவர்களது செல்போன்களை வாங்கி போலிஸார் வாட்ஸ் ஆப் உரையாடல்களைச் சோதனை செய்தனர்.
இது குறித்து இளைஞர்கள் கேட்டபோது, போதைப் பொருட்களைத் தடுக்கும் நடவடிக்கையாக சோதனை செய்வாதாக கூறியுள்ளனர். இதேபோன்று மங்கல்ஹத், போய்குடா, தூள்பேட் மற்றும் ஜுமேரத் பஜார் போன்ற பகுதிகளிலும் போலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
போலிஸாரின் இந்த சோதனை குறித்தான வீடியோக்கள் இணையத்தில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிஸாரின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலாக்நுமா பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது அப்பகுதியிலிருந்து டெய்லர் கடை, பிரிண்டிங் பிரஸ் ஆகியவற்றில் வணிக உரிமங்களை கேட்டுள்ளனர்.
அதேபோல் ஒருவரின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்துள்ளனர். தற்போது அந்த நபர் தாடி வைத்திருந்துள்ளார். இதற்கு போலிஸார் படத்தில் தாடி இல்லாமல் இருக்கு, இப் ஏன் தாடியோடு இருக்கிங்க என கேட்டு அடாவடி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஹைதராபாத் போலிஸார் தனி மனிதர்களின் உரிமைகளை மீறும் செயலில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.