கொரோனா பரவலுக்கு பின்னர் நேரடியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரியக்கமிட்டி கூட்டம் இடைக்காலத் தலைவர் சோனிய காந்தி தலைமையில் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பா.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், பிரியங்கா காந்தி மற்றும் ஜி-23 உறுப்பினர்கள் என 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டவை, கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் காங்கிரசின் மறுமலர்ச்சியை விரும்பும் அதே நேரத்தில் அதற்கான ஒற்றுமை மற்றும் கட்சி நலன்களை முதன்மையாக வைத்திருப்பது அதி அவசியம் ஆகும்.
நாடுதழுவிய அளவில் நவம்பர் மாதத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்த வேண்டும். மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் பாஜக அரசின் லட்சணங்களை பொதுவெளிக்கு கொண்டு வரும் வகையில் பிரியங்கா காந்தி தலைமையில் ஒரு இயக்கம் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா போன்ற மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படியெல்லாம் குழப்பங்களுக்கு வழிவகுக்காமல், வியூகம் வகுத்து அணுக வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கட்சித் தலைமையிடம் ஊடகங்கள் வாயிலாக பேசக் கூடாது எனவும், உட்கட்சியில் விவகாரங்கள் எதுவாக இருந்தாலும் நேரடியாக கட்சி தலைமையிடமே வந்து முறையிட்டு தீர்வு காணலாம் என்றும் தேவையில்லாமல் எந்த பரபரப்பையும் சச்சரவையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என சற்று கண்டிப்பாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.