இந்தியா

ம.பியில் ஆக்சிஜன் லாரியை மறித்து பூஜை - பாஜகவினரின் விளம்பர வெறியால் உயிருக்கு போராடும் கோவிட் நோயாளிகள்!

மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜன் கொண்டு வந்த டேங்கர் லாரியை மறித்து பாஜகவினர் பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ம.பியில் ஆக்சிஜன் லாரியை மறித்து பூஜை - பாஜகவினரின் விளம்பர வெறியால் உயிருக்கு போராடும் கோவிட் நோயாளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் மத்திய பிரதேசத்துக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டுச் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி பாஜகவினர் பூஜை செய்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் ஜாம் நகரில் இருந்து மத்திய பிரதேசத்தில் இந்தூருக்கு சுமார் 30 டன் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் சென்றிருக்கிறது டேங்கர் லாரி. நோயாளிகளின் அவசரம் புரிந்து உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உணர்வில் லாரி ஓட்டுநரோ சைலேந்திர குஷ்வாவோ 700 கிலோ மீட்டர் தொலைவிலான பயணத்தில் வெறும் 3 மணி நேரம் மட்டும் தூங்கியிருக்கிறார்.

இப்படி இருக்கையில் இந்தூர் நகருக்குள் நுழைவதற்கு முன்பே இரண்டு மணி நேரமாக ஆங்காங்கே லாரியை நிறுத்திய பாஜகவினர் பூஜை செய்து, புகைப்படங்களை எடுத்து நோயாளிகளின் உயிரோடு விளையாடியிருக்கிறார்கள். குஜராத்தில் இருந்து பிரதமர் மோடி ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளதை விளம்பரப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கேவலமான செயலில் மத்திய பிரதேச பாஜக எம்பி சங்கர் லால்வானி, எம்.எல்.ஏக்கள் ரமேஷ் மெண்டேலா, ஆகாஷ் விஜயவர்ஜியா ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் மக்கள் உயிரிழந்து வரும் வேளையில் மத்திய பிரதேசத்திலேயே 6 பேர் பலியாகியிருப்பது விளம்பற வெறி பிடித்த பாஜகவினரின் அறிவுக்கு ஏன் எட்டுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories