இந்தியா

சொந்த நாட்டை அடுத்து பக்கத்து நாட்டினரும் எதிர்க்கும் மோடி : வங்கதேச பயணத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு!

வங்க தேசம் சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சொந்த நாட்டை அடுத்து பக்கத்து நாட்டினரும் எதிர்க்கும் மோடி : வங்கதேச பயணத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

சொந்த நாட்டில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் Go Back Modi என்ற கோஷம் பின் தொடர்ந்து வரும் வேளையில் நாடு விட்டு நாடு சென்றாலும் அந்த சம்பவம் தொடர்வது பாஜகவினரை சோகம் சூழ்ந்துள்ளது.

அவ்வகையில், வங்க தேசம் சென்றவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு மக்களும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மோடி அந்நாட்டுக்கு வருவதற்கு முன்பே போராட்டத்தில் இறங்கியதோடு அவர் வந்ததும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த நாட்டை அடுத்து பக்கத்து நாட்டினரும் எதிர்க்கும் மோடி : வங்கதேச பயணத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு!

இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள தாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (மார்ச் 25) நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் போலிஸாருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, தாக்கா பகுதியில் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீதும் அந்நாட்டு போலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை பீய்ச்சி அடித்தும் ரப்பர் குண்டுகளை வீசியும் தடுத்தி நிறுத்த முயற்சித்திருக்கிறாகள். இந்த பேரணியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேலானோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் பாஜக அரசு மேற்கொண்ட தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெருவாரியாக பாதிக்கப்பட்டும் அடக்குமுறைகளை எதிர்கொண்டும் வருவதன் காரணமாகவும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories