இந்தியா

“விவசாயிகளை தேசவிரோதிகளாக சித்தரிக்க முயல்வதை ஏற்கமாட்டோம்” - மம்தா பானர்ஜி காட்டம்!

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால், ஆட்சி பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என மத்திய பா.ஜ.க. அரசை எச்சரித்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. 

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா ஆகிய பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றின. தற்போது அந்த வரிசையில் மேற்கு வங்கமும் இணைய உள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீர்மானத்தை முன்மொழிந்தார். விரைவில் தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, விவசாயிகளை தேசத்திற்கு விரோதமானவர்கள் என்று சித்தரிக்க முயல்வதை ஏற்க மாட்டோம் என தெரிவித்தார்.

“விவசாயிகளை தேசவிரோதிகளாக சித்தரிக்க முயல்வதை ஏற்கமாட்டோம்” - மம்தா பானர்ஜி காட்டம்!

டெல்லியின் நிலைமையை போலிஸாரால் சமாளிக்க முடியவில்லை என்றும், டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாக கையாண்டுள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், சட்டங்களை வாபஸ் பெறுங்கள் அல்லது ஆட்சி பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை சாடி மம்தா பானர்ஜி காட்டமாக பேசியுள்ளார்.

மேலும், நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம். 3 சட்டங்களை திரும்பப் பெற விரும்புகிறோம். வேளாண் சட்டங்கள் பலவந்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாக கையாண்டுள்ளது. அங்கு நடந்ததற்கு பா.ஜ.க. தான் பொறுப்பு. முதலில் டெல்லியை சமாளியுங்கள், பின்னர் வங்கத்தை நினைத்துப் பாருங்கள்.

banner

Related Stories

Related Stories