இந்தியா

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி காலவரையற்ற பட்டினி போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்.. இன்று ஆலோசனை!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் பெண் விவசாயிகள், குஜராத், ஒடிசா மாநில விவசாயிகளும் புறப்பட்டனர்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி காலவரையற்ற பட்டினி போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்.. இன்று ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடிய புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் குளிரில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இன்று 20வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைப்பினர்களும், பொது மக்களும் களத்தில் இறங்கி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மத்திய அரசுடன் இதுவரையில் 5கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் தோல்வியை தழுவியதால் அடுத்தத்தடுத்த போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி காலவரையற்ற பட்டினி போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்.. இன்று ஆலோசனை!

அவ்வகையில் நேற்று ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்தியதை அடுத்து சட்டங்களை திரும்பப் பெறவில்லையெனில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவது குறித்து இன்று விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் பஞ்சாப்பில் இருந்து இராண்டாயிரம் பெண் விவசாயிகளும் புறப்பட்டிருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக்கோரி 10 ஆயிரம் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories