இந்தியா

“காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்குவோரை அரசு விட்டு வைக்காது” - புதுச்சேரி முதல்வர் கடும் எச்சரிக்கை!

புதுச்சேரியில் கொரோனா தொற்று மீண்டும் வந்தால் மாநிலம் தாங்காது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 “காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்குவோரை அரசு விட்டு வைக்காது” - புதுச்சேரி முதல்வர் கடும் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுவோரை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஊக்குவிக்கிறார்கள். அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டோரை அரசு விட்டுவைக்காது என புதுச்சேரி முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ செய்தியின் மூலம் பேசியுள்ள முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 97 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்து பத்து அல்லது பதினைந்து நாட்களில் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான், பஞ்சாப்பில் இரண்டாம் கட்டத்தை கொரோனா பரவல் அடைந்துள்ளது.

இதனால் புதுச்சேரி மக்கள் விழிப்பாக, சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். கொரோனா தொற்று மீண்டும் வந்தால் மாநிலம் தாங்காது. வருவாய் குறைவாக இருக்கும் போதும் மத்திய அரசின் உதவியும் இல்லை. காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் ஏ.கே.டி.ஆறுமுகம் ரவடி கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். வெடிக்குண்டு வீசி ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. தொடர் தேர்தல் பணியால் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. காவல்துறை தீவிரமாக விசாரிக்கிறது. ஆறுமுகத்துக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளை செயல்களில் ஈடுபடுவோரை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஊக்குவிக்கிறார்கள். மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் கொலைக்கு அப்பகுதி அரசியல் தலைவர்கள் பின்னணியில் இருக்கிறார்கள். அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டோரை அரசு விட்டுவைக்காது.

புதுச்சேரி மாநில தனியார் மருத்துவக் கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 சதவிகித இட ஒதுக்கீடு தரவேண்டும். சட்ட வரையரை தயார் செய்து மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் கிடைத்த பிறகு சட்டமாக புதுச்சேரியில் நிறைவேற்றுவோம். 10 சதவிகிதக் கோப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் நடைமுறைப்படுத்துவோம். அனைத்து முயற்சியும் எடுத்து வருகிறோம். அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்க அனைத்து முயற்சியும் எடுப்போம்.” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories