இந்தியா

“விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி” - புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் கைது!

புதுச்சேரி தவளக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் செல்வக்குமார் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்ததால், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

“விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி” - புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காவனூர் பைத்தாம்பாடியைச் சேர்ந்தவர் விவசாயி பாவாடை. இவர் இரண்டு கறவை மாடுகளை வைத்து பால் விநியோகம் செய்து வருகிறார்.

அவரிடம் புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் செல்வக்குமார், அவரது மனைவி சுதா மற்றும் பைத்தாம்பாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களின் பால் குளிரூட்டும் நிறுவனத்திற்கு பால் வினியோகம் செய்யும்படி பாவாடையிடம் கூறியுள்ளனர்.

மேலும் பால் கொள்முதல் செய்யப்பட்ட 10 நாட்களில் பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய விவசாயி பாவாடை அந்த பால் நிறுவனத்திற்குத் தொடர்ந்து பால் விநியோகம் செய்துள்ளார். இந்நிலையில் பால் கொள்முதல் செய்த பிறகும் அதற்கான தொகையை தராமால் அடிக்கடி இழுத்தடித்து வந்துள்ளனர்.

“விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி” - புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் கைது!

இதுவரை தரவேண்டிய பால் கொள்முதல் தொகை ரூ.24 ஆயிரத்தை உடனே தரும்படி செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பாவாடை கேட்டுள்ளார். அப்போது பா.ஜ.க பிரமுகர் செல்வக்குமார் பணம் தர முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயி பாவாடைக்கு செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி பாவாடை பணம் தராமல் மோசடியில் ஈடுபட்ட செல்வக்குமார் உள்ளிட்ட மூவர் குறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், தன்னிடம் புதுச்சேரி தவளக்குப்பத்தை சேர்ந்த செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோர் பால் கொள்முதல் செய்து ரூ.24 ஆயிரம் மோசடி செய்துவிட்டதாகவும், இத போன்று மேலும் 70 பேரிடம் இருந்து பால் கொள்முதல் செய்து மொத்தம் 32 லட்சத்து 17 ஆயிரத்து 924 ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

“விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி” - புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் கைது!

மனுவைப் பெற்றுக்கொண்ட டி.ஐ.ஜி, அதன் மீது நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க பிரமுகர் செல்வக்குமார் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகர் செல்வக்குமாரிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது. பா.ஜ.கவினரின் இந்த மோடி சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு நல திட்ட உதவி செய்து நல்லவர்கள் போல் காட்டிக்கொள்ள பல்வேறு நாடகங்களை பா.ஜ.க பிரமுகர் செல்வக்குமார் குடும்பத்தினர் செய்துள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி பெயரில் உணவகம் ஒன்றையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories